சமீபத்தில் இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதன் ஆசிரியர் அகிலன் இந்த நாவலுக்காக 1963-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்று உள்ளார் .இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வோர் மனத்திலும் நான் தமிழன் என்பதில் பெருமை பட வைக்கிறது. சோழர்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோயில் ,ஆனால் இந்த புத்தகத்தில் கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய பல அறிய குறிப்புகளை நாம் காணலாம். பொன்னியின் செல்வன் படித்த அனைவரது மனதிலும் பதிந்த வந்தியத்தேவன் இதிலும் வலம் வருகிறார் .இலங்கையின் இயற்கை வளத்தை பற்றி நாவலில் சொல்லி இருப்பது அருமை .வீரத்துடன் விவேகமும் சேர்ந்தால் தான் வெற்றி என்பதை கதையின் ஆரம்பத்திலே நம் மனதில் பதிய வைத்து விடுகிறார் ஆசிரியர் .தெளிவான முடிவு இல்லாததால் ஏற்படும் விளைவுகளை சுட்டி காட்டியுள்ளார்
Thursday, November 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment