Friday, July 16, 2010

How to protect your MS 2007 Document with password


How to set your document so that a password is required to view or modify it.

                   
  • Click the Microsoft Office Button
  •                
  • Choose Prepare
  •                
  • Choose Encrypt Document
  •                
  • Enter Password
  •                
  • Save Document as Normal
  •                
  • Re-Open Document to Test


Wednesday, January 28, 2009

இதயத்தைத் தேடி


இதயமில்லாமல் கேட்கிறாய் நான் ஏன் உன்னை நேசிக்க வேண்டும் என்று
எப்படி சொல்வேன் என் நேசத்தை விளக்க அனுப்பிய இதயம்
தொலைந்த கதையை

நீர்


வான் மேகம் நான்
பொன் வானம் நீ
மழையாய் உன்னை விட்டு பிரிந்தாலும்
உன்னை சேரவே தவம் செய்கிறேன் -தினமும்
பகலவனை நோக்கி

Thursday, December 18, 2008

தீவிரவாதிகள்


துப்பாக்கி குண்டுகளை
ஏழைகளுக்கு மட்டும்
இலவசமாக அழிக்கும்
இவர்கள் யார்
கொடைவள்ளல்களா ?
அரசியல்வாதிகளா?

Monday, December 15, 2008

அண்ணன்





தந்தையாய் பாதுகாவலனாய்
நண்பனாய் வழிகாட்டியாய்
இறைவன் அனுப்பிய
புதையல் நீ
அதனால் தைரியமாய்
எடுத்து வைக்கிறேன் என் வாழ்க்கை பாதையில்
ஒவ்வொரு அடியையும்
கடக்கிறேன் ஒவ்வொரு தடையையும்
உன் துணையுடன்

என் தங்கை


நான் வாழ்ந்த கருவறையில் உயிர் பெற்ற என் ஜீவன்
அக்கா அக்கா என்று என்னை சுற்றி ரீங்காரமிடும் சிங்காரம்
கைகளை பிடித்து கொண்டு பள்ளி வந்த பட்டாம்பூச்சி
முத்தம் கொடுத்து கன்னங்களை ஈரமாக்கிய என் முதல் குழந்தை
உடல்நலம் சரி இல்லாத காலத்தில் தாயாகும் என் கண்மணி
ஒரு நாள் கூட என்னை பிரியாத என் ஜீவனே
நீ அங்கே நான் இங்கே
வெறும் காற்றின் வழியே நம் உரையாடல்
மொட்டை மாடி நிலவின் அடியில் நீ என் மடியில்
நீ பாடிய பாடல்கள்
நான் சொன்ன கதைகள்
அன்னை ஊட்டிய சாதம்
என எல்லாமே நினைவுகளில் மட்டும்
எப்போது கிடைக்கும் நாம் இருவர் சேர்ந்து இருந்த வசந்த காலம்
யாருக்கு முதலில் தலை கட்ட வேண்டும் என்று அன்னையிடம்
சண்டை போட்ட பரபரப்பான அதிகாலை
பள்ளிகூட புளிய மரத்தடியில் நான் சேர்ந்து விளையாடிய மதிய வேளை
கார்டூன் பார்த்து சாதம் உண்ட அந்த மாலை வேளை
எதிர் பார்த்து காத்து இருக்கிறது என் இதயம்

Monday, December 8, 2008

வெண்ணிலா தேர்


சாரதி இல்லாமல் சக்கரங்கள் இல்லாமல்
வான வீதியில் உலா வரும்
பால் நிலா

வான மங்கையின் நெற்றியை தேடி
சுழன்று கொண்டிருக்கும் பொன் நிலா

கதிரவனின் கரங்களில் இருந்து
ஒளியை பெற்று தன்னை
புதுப்பித்து கொள்ளும் வெள்ளி நிலா

மேக திரள்களில் ஒளிந்து விளையாடும்
பிள்ளை நிலா